⭕ வயிறு/அஜீரணம்/இஞ்சி
இஞ்சிச்சாறு எடுத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் அருந்த அஜீரணக் கோளாறு குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/இஞ்சி
இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது.
⭕ வயிறு/அஜீரணம்/இஞ்சி இலை
இஞ்சி இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் ஜீரணம் ஏற்படும். வயிற்று உப்புசம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/எலுமிச்சை பழம்
இளம் சூடான வெந்நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை ஊற்றி காலையில் குடித்து வந்தால் அஜீரணம் குறையும். தோல் நோய்களும் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஏலக்காய்
ஏலக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
ஓமத்தை பொடி செய்து சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
ஓமம், சீரகம், மிளகு, கருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, சுக்கு ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து தினசரி பகல் உணவின் போது இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு பிடி சாதத்தில் சோ்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
சிறிதளவு ஓமம் எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
ஓமத்தை அரைத்து பசும்பாலில் கலந்துக் குடித்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/ஓமம்
ஓமம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, பிரண்டை ஆகியவற்றை சேர்த்து இடித்து அரைப்படி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கடுகு
கடுகை அரைத்து அதனுடன் மிளகு பொடி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர அஜீரணக் கோளாறு குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கருஞ்சீரகப்பொடி
கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கருந்துளசி
ஜீரணமாக கருந்துளசி சாறெடுத்து குடிக்க அஜீரண கோளாறு குணமாகும்.
⭕ வயிறு/அஜீரணம்/கரும்பு சாறு
கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து சர்பத் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவேண்டும். இதை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.
⭕ வயிறு/அஜீரணம்/கறிவேப்பிலை
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை கொதிக்க வைத்து குடிக்க அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கிராம்பு
கிராம்பு, சுக்கு சமஅளவு எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/குப்பைமேனி
குப்பை மேனி சாற்றில் உப்பு சேர்த்து காய்ச்சி மோரில் கலந்து கொடுக்க அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
⭕ வயிறு/அஜீரணம்/கொத்தமல்லி பூ
கொத்தமல்லி பூவை வெந்நீர் வைத்து குடிக்க ஜீரணசக்தி அதிகரிக்கும்.
⭕ குழந்தை/அஜீரணம்/சதகுப்பை விதை
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை தூண்டும்.
0 Comments